வால்பாறை நடைபாதை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

வால்பாறையில் நடைபாதை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


வால்பாறை: வால்பாறையில் நடைபாதை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எஸ்டேட்டைச் சேர்ந்த 65 வயது வியாபாரி வால்பாறை நகரில் நடைபாதையில் துணி மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர், வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ளாமல், வீட்டிலேயே அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...