கோவை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள கோர்ட்களில் மீண்டும் ஆன்லைன் வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள கோர்ட்களில், மீண்டும் ஆன்லைன் வாயிலாக விசாரணை நடத்தப்படும் என்று, மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணையில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில், மாவட்ட நீதிபதி சக்திவேல், நீதிமன்றத்தில் 26 முதல் வரும் 30 வரை கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து நீதிமன்றங்களில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குப் பட்டியல் குறித்த 'காலிங் ஒர்க்' இனி கிடையாது. இரு தரப்பு தயாராக உள்ள வழக்கு மட்டும், நேரடி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இது தொடர்பாக இரு தரப்பு வக்கீல்கள், இ-மெயில் வாயிலாக முன்கூட்டியே, விசாரணை கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும். ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, மறு உத்தரவு வரும் வரை இ-மெயில் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். காணொளி வாயிலாக வாதிட விரும்பும் வக்கீல்கள், அது பற்றிய விவரத்தை, இ-மெயிலில் தெரிவிக்க வேண்டும். காணொளி வாயிலாக வக்கீல்கள் வாதிட, ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் குறித்து கோர்ட் வாயிலாக தெரிவிக்கப்படும்.
கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடர்பான ஆவணங்களை, நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள டிராப் பாக்சில், சீலிடப்பட்ட கவரில் வைத்து போட வேண்டும். நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்கள் தேவையின்றி நுழைய தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு வருவோர், கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட வக்கீல்கள், நீதிமன்றம் வருவதை தவிர்த்து, வீடியோகான்பரன்ஸ் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார் அசோசியேசன், அட்வகேட் சேம்பர், நூலகம் மற்றும் கேன்டீன் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.