கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை தாமரை குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே கொட்டப்பட்டு வருவதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், ரயில்வே கேட் அருகே கொட்டப்பட்டு வரும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் அலட்சியமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீரில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இடத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கொரோனா நோய் தொற்றால் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், சுகாதாரமற்ற சூழலில் வாழ்வது டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ காரணமாக அமையும் என்பதால், இனி வரும் நாட்களில் இது போல குப்பைகளை தேங்க விடாமல், உடனடியாக அகற்ற வென்ஸ் என்பதே தாமரைக்குளம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.