கோவையில் நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது வழக்கு!

கோவை: கோவையில் வீட்டுக்கு வந்த உறவினரை பக்கத்து வீட்டு நாய் கடித்த ஆத்திரத்தில் நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் வீட்டுக்கு வந்த உறவினரை பக்கத்து வீட்டு நாய் கடித்த ஆத்திரத்தில் நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேடு வ.உ.சி காலனியைச் சேர்ந்த பாலசுந்தரம்தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

அண்மையில் சீனிவாசனின் வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சீனிவாசன் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த பாலசுந்தரத்தின் நாய் அந்த நபரை பார்த்து குறைப்பதுடன் திடீரென அவரை கடித்து விட்டது. இதில் காயமடைந்த அவர் சம்பவம் குறித்து சீனிவாசனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக உறவினரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைத்தார்.

உறவினரை நாய் கடித்தால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது நண்பருடன் சேர்ந்து பாலசுந்தரத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு சுற்றித் திரிந்த நாயை தரதரவென இழுத்து சாலைக்கு கொண்டு வந்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாய் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் யாருடைய பேச்சையும்கேட்காமல் தொடர்ந்து நாயை தாக்கினர். இதனால், சிறிது நேரத்தில் நாய் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் போலீசில் புகார் கொடுக்குமாறு நாயின் உரிமையாளரையும் அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தினர். இதையடுத்து பாலசுந்தரம் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் மீது விலங்குகளை கொல்லுதல் விலங்குகள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...