கோவையில் சூடான் இளைஞரை தாக்கிய 12 பேர் சிறையில் அடைப்பு!

கோவை: கோவையில் கடையில் ஏற்பட்ட தகராறில் சூடான் இளைஞரை 12 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் கடையில் ஏற்பட்ட தகராறில் சூடான் இளைஞரை 12 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியுள்ள சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மாலை போத்தனூரில் உள்ள ஒரு மளிகை கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது மேன்ஷனில் தங்கியிருந்த சூடான் நாட்டு வாலிபரும் பொருட்கள் வாங்க அங்கு சென்றார்.

கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த இஷாந்த்(19) என்ற இளைஞருடன் சூடான் மாணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. . இதுகுறித்து இஷாந்த் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இஷாந்தின் நண்பர்கள் 11 பேர் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். சூடான் இளைஞர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். சூடான் இளைஞருடன் இருந்த மாணவர்கள் உட்படமூன்று பேரும் 12 பேர் கும்பல் அடித்து உதைத்தது.

இதையடுத்து காயம் அடைந்தவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்..

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...