கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (26.04.2021) மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் சக்தி சுகா அலுவலகத்தில் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட பத்திரிகையாளர் சங்க அலுவலகம் அருகில் கொரோனா சிறப்பு மருத்துவமுகாம் அமைத்து, பத்திரிகையாளர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை (Swap Test) செய்யும் பணிகள் நடைபெறுவகையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கபசுர குடிநீர் பருக வேண்டும், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும், குடும்ப நபர்களில் கொரோனா நோய் அறிகுறி இருப்பின் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அரசின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்திட ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், சக்திசுகர் குரூப் சேர்மன் மாணிக்கம், மேலாளர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.