கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்.. மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று (26.04.2021) மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சக்தி சுகா அலுவலகத்தில்‌ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகளையும்‌, உப்பிலிபாளையம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள கோவை மாவட்ட பத்திரிகையாளர்‌ சங்க அலுவலகம் அருகில்‌ கொரோனா சிறப்பு மருத்துவமுகாம்‌ அமைத்து, பத்திரிகையாளர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை (Swap Test) செய்யும்‌ பணிகள்‌ நடைபெறுவகையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு, அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, கபசுர குடிநீர் பருக வேண்டும்‌, மல்டி விட்டமின்‌ மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்‌, அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்‌, குடும்ப நபர்களில்‌ கொரோனா நோய்‌ அறிகுறி இருப்பின்‌ உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌, அரசின்‌ சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நோய்‌த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்திட ஒத்துழைக்க வேண்டும்‌ என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்‌ போது, மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, சக்திசுகர்‌ குரூப்‌ சேர்மன்‌ மாணிக்கம்‌, மேலாளர்‌ மகேந்திரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, பத்திரிகையாளர்கள்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...