கோவை: சவரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சலூன் கடைகளைத் திறக்க சிறப்பு அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன், அழகு நிலையங்கள் செயல்பட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவால் சவரத் தொழிலாளர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்ற ஆண்டு முழு ஊரடங்கின் போது பல சவரத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தொழிலை விட்டுச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது என்று தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த முறையும் சலூன்கள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். கோவை மாநகராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளதாகவும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சலூன் கடைகள் செயல்பட அரசு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தாங்கள் செயல்படுவோம் என்று உறுதி கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.