பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(34), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சந்திரசேகருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோரிடம் பேசி, சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக குழந்தைகள் நலவாரிய அலுவலர் ராணி, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் சந்திரசேகரை கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தைத் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.