முழு ஊரடங்கு: உடுமலையில் வெறிச்சோடி காணப்படும் காய்கறி கமிசன் மண்டிகள்..!

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று காய்கறி கமிசன் மண்டிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று காய்கறி கமிசன் மண்டிகள் வெறிச்சோடி காணப்பட்டது.



உடுமலைப்பேட்டை ராஜேந்திரா ரோட்டில் தினசரி மற்றும் காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் காய்கறிகளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுவாக இங்கே நாளொன்றுக்கு பல டன் காய்கறி வர்த்தகம் நடைபெறும்.



இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு என்பதால் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இன்று காய்கறிகள் கொள்முதல் செய்தால் நாளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு இன்று காய்கறி கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர்.

இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஊரடங்கு என்பதால் நாளையும் காய்கறி வாங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே நாளையும் கமிஷன் மண்டிகளுக்கு விடுமுறை விட்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...