கோவையில் கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பார்வையிட்டார்.


கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பார்வையிட்டார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பல்வேறு தொடர்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்‌ தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்தில்‌ பராசக்தி காலனியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பார்வையிட்டார். அப்பகுதியில்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளா்களிடம்‌ தினமும்‌ கிருமி நாசினி தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெற வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ கொரோனா பாதித்த வீடுகளிலுள்ள அனைவரும்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்‌ என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில்‌ நடைபெறும்‌ கொரோனா சிறப்பு முகாமை ஆணையாளர்‌ பார்வையிட்டார்.



அப்போது அங்குள்ள பொதுமக்களிடம்‌ பேசிய ஆணையர் பெ.குமாரவேல், “கொரோனா பாதித்த நபர்களின்‌ குடும்பத்திலுள்ள அனைவரும்‌ கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌. கொரோனா நோய்‌ தொற்றின்‌ தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்‌.

அவசியமின்றி பொதுமக்கள்‌ வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கபசுர குடிநீர்‌ குடிப்பதுடன்மல்டி விட்டமிண்‌ மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்‌.

அனைவரும்‌ கொரோனா நோய்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌. அரசின்‌ சுகாதார வழிமுறைகளை தவறாமல்‌ பின்பற்றி நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.



முன்னதாக, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்திமாநகர் பகுதியில்‌ நடைபெற்ற முகாமில் டாஸ்மாக்‌ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகளை பார்வையிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...