கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பார்வையிட்டார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்தில் பராசக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பார்வையிட்டார். அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளா்களிடம் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கொரோனா பாதித்த வீடுகளிலுள்ள அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் கொரோனா சிறப்பு முகாமை ஆணையாளர் பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் பேசிய ஆணையர் பெ.குமாரவேல், “கொரோனா பாதித்த நபர்களின் குடும்பத்திலுள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
அவசியமின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கபசுர குடிநீர் குடிப்பதுடன்மல்டி விட்டமிண் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
அனைவரும் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்திமாநகர் பகுதியில் நடைபெற்ற முகாமில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.