பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகக் கூறி மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணராஜா(36), விவசாயி. இவரது மனைவி சரண்யா(26). இருவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், 5 வயது மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமண ராஜாவின் மனைவிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று அதிகாலையில் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த லட்சுமண ராஜா அரிவாளால் சரண்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர், கோட்டூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

தகவலறிந்த கோட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமண ராஜா மீது கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.