குன்னூர் இசைக் கலைஞர்களின் போராட்டம்... கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமாக மாற்றிய காவல்துறை..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்ததால் போராட்டம் செய்வதற்காக வந்த இசை கலைஞர்களை சாமர்த்தியமாகப் பேசி, அவர்களின் போராட்டத்தை குன்னூர் காவல் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமாக மாற்றினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்ததால் போராட்டம் செய்வதற்காக வந்த இசை கலைஞர்களை சாமர்த்தியமாகப் பேசி, அவர்களின் போராட்டத்தை குன்னூர் காவல் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமாக மாற்றினர்.

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் குறைந்த அளவே மக்கள் கலந்து கொள்ள அனுமதி உள்ளதாலும் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நாகஸ்வரம், தவில் மற்றும் பேண்ட் வாத்தியம் வாசிக்கும் கிராமிய இசைக் கலைஞர்கள் இன்று ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.



ஆனால், போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாத சூழல் உள்ளதால், அவர்களை ஊர்வலமாக வந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ளுமாறும் அதன்பிறகு, கோட்டாட்சியர் கவனத்திற்கு உங்களது பிரச்சினையைக் கொண்டு செல்கிறோம் என்றும் காவல் துறையினர் சாமர்த்தியமாகப் பேசி பிரச்சினையை சமாளித்தனர்.



இதனைப் புரிந்து கொண்ட இசைக் கலைஞர்கள் புறக்காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்து அங்கே பழைய சோகப்பாடல்களான ‘ராஜாபார்ட் ரங்கதுரை' படத்தில் சிவாஜி பாடும் ‘ஜின்ஜினுக்கா சின்னக்கிளி' என்ற பாடலையும் ‘கடவுள் உள்ளமே... கருணை இ்ல்லமே' என்ற பாடலையும் உருக்கமாகப் பாடிவிட்டு தங்களது நிலையினை பொது மக்களுக்கும் அனுமதியை சாமர்த்தியமாக மறுத்து நிகழ்சியை தங்களுக்கு சாதமாக்கிக்கொண்ட காவல் துறைக்கும் இசையால் புரிய வைத்துவிட்டு சென்றனர். போராட வந்தவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை காவல் துறையினர் கொடுத்ததுதான் நிகழ்ச்சியில் ஹைலைட்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...