கோவை: ‘பிங்க்' நிறத்தில் உலாவரும் ‘வாட்ஸ்அப்' செயலி மொபைல் போனில் உள்ள தகவல்களை 'ஹேக்' செய்யப்படலாம்' என உலா வரும் தகவல் குறித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக, ‘பிங்க்' நிறத்தில் ‘வாட்ஸ்அப்' செயலியை பயன்படுத்தலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இத்தகவலுடன் ‘வாட்ஸ்அப்' பிங்க் நிறத்தில் பயன்படுத்த ஒரு இணைய முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் ‘வாட்ஸ்அப்' மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என, தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த இணைய முகவரியை, ‘கிளிக்' செய்தால், நமது ஸ்மார்ட்போனில் ஆபத்தை விளைவிக்கும் செயலி தானாகவே பதிவேறிவிட வாய்ப்புள்ளது. இதன்மூலம் நமது மொபைல் போனில் உள்ள விபரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார், ‘‘இந்த ‘பிங்க்' நிற ‘வாட்ஸ்அப்' தகவல் போலியானது. பயனர்களின் விபரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், போலியான தகவல்களை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது. பயனர்கள் உஷாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.