கோவை: கொரோனா அச்சம் காரணமாக கோவையில் இருந்து வெளியூர் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவையடுத்து இரவு நேரங்களில் வெளி மாநிலம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டது.
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி பேருந்து நிலையத்தில் 30 அரசு விரைவு பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னை, விழுப்புரம் நெல்லை, கன்னியாகுமரி நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பெங்களூர் திருப்பதி ஆகிய வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிங்காநல்லூரில் இருந்து வெளியூர் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 140 பேருந்துகளில் 40 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப 6:30 மணி முதல் 12 மணி வரை வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கை கழுவ சானிடைசர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். எனினும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.