கோவை: கோவை-சிறுவாணி சாலையில் 100 ஆண்டு பழமையான வாகை மரம் இடி விழுந்து கொழுந்துவிட்டு எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோவையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து வந்தது. நேற்று இரவு அதிகாலை கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறை காற்றுடன் மழை பெய்தது.

இதில் சிறுவாணி சாலை நல்லூர் வயல் பகுதியில் அதிகமான இடி, மின்னல் காணப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் இருந்த வாகை மரத்தில் இடி தாக்கியதில் மரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ சரியாக அமைக்கப்படாததால் மீண்டும் மரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இடி விழுந்ததால் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக மரத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இடி விழுந்து தீ பற்றியதால் வலு குறைந்த மரம் திடீரென உடைந்து சாலையில் விழுந்தது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். கடந்த சில நாட்களாக மழை பெய்தது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இடி தாக்கியதில் பழமையான மரம் முற்றிலும் எரிந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.