கோவை: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் வெங்காய மார்க்கெட் மற்றும் மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில் செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் வெங்காய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் செயல்படும் வெங்காய மார்க்கெட்டை தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்படுவதற்காக மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனிக்கு எதிரில் உள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், வெங்காய மார்க்கெட்டை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி வளாகத்தில் உள்ள காலியிடத்தில் தற்காலிகமாக செயல்படுவதற்கான இடமாக தேர்வு செய்தார். இவ்விடத்தில் வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் உடனடியாக மாற்றம் செய்து கூட்ட நெரிசலை தவிர்க்கும்படி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தரராஜன், உதவி ஆணையாளர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் சவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.