கோவையில் எம்‌.ஜி.ஆர்‌ மார்க்கெட்டில்‌ வெங்காய மார்க்கெட்‌ மற்றும்‌ மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில்‌ செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ செயல்பட்டுவரும்‌ எம்‌.ஜி.ஆர்‌ மார்க்கெட்டில்‌ வெங்காய மார்க்கெட்‌ மற்றும்‌ மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில்‌ செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ செயல்பட்டுவரும்‌ எம்‌.ஜி.ஆர்‌ மார்க்கெட்டில்‌ வெங்காய மார்க்கெட்‌ மற்றும்‌ மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில்‌ செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனைத்‌ தொடர்ந்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ செயல்பட்டுவரும்‌ எம்‌.ஜி.ஆர்‌. மார்க்கெட்டில்‌ வெங்காய மார்க்கெட்‌ செயல்பட்டு வருகிறது.



தற்போது கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று அதிகரித்து வரும்‌ நிலையில்‌ கூட்ட நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டும்‌, கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ பொருட்டும்‌ எம்‌.ஜி.ஆர்‌. மார்க்கெட்டில்‌ செயல்படும்‌ வெங்காய மார்க்கெட்டை தற்காலிகமாக மாற்று இடத்தில்‌ செயல்படுவதற்காக மேட்டுப்பாளையம்‌ சாலையிலுள்ள பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கவுண்டம்பாளையம்‌ எருக்கம்பெனிக்கு எதிரில்‌ உள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், வெங்காய மார்க்கெட்டை கவுண்டம்பாளையம்‌ எருக்கம்பெனி வளாகத்தில்‌ உள்ள காலியிடத்தில்‌ தற்காலிகமாக செயல்படுவதற்கான இடமாக தேர்வு செய்தார். இவ்விடத்தில்‌ வெங்காய மார்க்கெட்‌ வியாபாரிகள்‌ உடனடியாக மாற்றம்‌ செய்து கூட்ட நெரிசலை தவிர்க்கும்படி மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தரராஜன்‌, உதவி ஆணையாளர்‌ (வருவாய்‌) அண்ணாதுரை, செயற்பொறியாளர்‌ சவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...