கோவை: கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள, நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தாலுகாவில் 25 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் காவலர் குடியிருப்புகளிலும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு எஸ்.ஐ., காவலர்கள் குடியிருப்பில், மூன்று எஸ்.ஐ.,களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர், காவலர் குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, சளி மாதிரி எடுக்கப்பட்டது. காரமடை அருகே பொன்னம்மாள் கார்டனில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன், மருமகள் ஆகிய, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், நேற்று மொத்தமாக, 25 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மேலும் போலீஸ் நிலைய குடியிருப்பில் இருந்த மற்றொரு சப் இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதி போலீஸ் அலுவலகங்களில் கடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர் கூறப்படும் 40 பேருக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில் 20 பேர் நேற்று ஜோதிபுரம் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொண்டனர்.