வால்பாறை: வால்பாறையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது என வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மலைப் பகுதியாகும். வால்பாறையில் பொதுவாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்வார்கள். தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவைகளை வாங்குவது வழக்கம்.
2020ஆம் ஆண்டு சுமார் பத்து மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் வால்பாறை வியாபாரிகள் வாகன ஓட்டிகள், சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் கொரோனா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை முதல் இரவு நேரத்தில் அமல்படுத்தப்படுகிறது.
எனினும் வால்பாறை பகுதியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து தளர்வு செய்து வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தரப்பில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வியாழக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபடுவது என வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்புசங்கத்தினர் தீர்மானித்திருக்கின்றனர்.