டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்!

கோவை: கொரோனா தொற்றைத் தடுக்க நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்றைத் தடுக்க நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில்,“ பார்கள் அனைத்தும் விடுமுறை விடப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மற்ற நாட்களில் மதுபானம் வாங்க வரக்கூடிய வாடிக்கையாளர்கள் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மதுபானங்கள் வாங்க வேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மது வாங்குவதற்கு முன்பு சானிடைசர் மூலம் கையை சுத்தம் செய்ய வேண்டும். வரிசையில் வரக்கூடியவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...