கோவையில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவையில் கஞ்சா விற்ற அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்ற அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை சூலூர் பாப்பம்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பாரதிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்தன. அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினர். அப்போது, அவர்களை பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த சுமந்தா பிஷ்வாள் (31) மற்றும் இவரது அண்ணன் சுஸ்மந் பிஷ்வள் (31) என்பதும் இவர்கள் இருவரும் சூலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதிகள் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்று பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் குமார் (27), கோரிபாளையத்தை சேர்ந்த கிருபாகரன் (19) என்பதும் அவர்கள் தற்போது காடம்பாடி பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்கு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...