திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பாப்பம்பட்டியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடை விற்பனையாளர், கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது நள்ளிரவு ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அங்கு சென்று கடை முன் நின்று கொண்டிருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்த போது இருவர் தப்பினர், ஒருவர் பிடிப்பட்டார்.
மூவரும் மதுபான கடையை உடைத்து உள்ளே இருந்து பணம் மற்றும் மதுபானங்களை திருட முயற்சித்ததாகவும் அதில் இந்த கடையின் ஷட்டர் பகுதி மற்றும் சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் அவர்கள் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் ஜேசுதாஸ் (20) என்பதும் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வயலூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மீதமுள்ள இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.