கோவை: கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகம் சார்பில், அனைத்து கோயில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
“கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகள் என்று அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறும் பணியாளர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்களுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.
போதுமான முகக்கவசங்கள், கிருமி நாசினிகளைகையிருப்பில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் கும்பலாக நிற்கவோ, அமரவோ அனுமதிக்க கூடாது.
கோயில் வளாகத்தில் திருமண வைபவங்கள், உப்பு மஞ்சள் மாற்றுதல் போன்ற நிகழ்வுகளை விதிமுறைப்படி நடத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் விதிமுறைகளை மீற கூடாது. விதிகளை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.