பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்பு!

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழக விலங்காக கருதப்படும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழக விலங்காக கருதப்படும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானை, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, காட்டு மாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் விலங்காக கருதப்படும் வரையாடுகள் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மலை பாறைகளுக்கு நடுவே வாழ்ந்து வரும் வரையாடுகளின் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.



பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்களை 21 பகுதிகளாக பிரித்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரையாடுகள் அதிகம் வாழும் இடமான அட்டகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்

அப்போது, வரையாடுகள் வாழும் இடத்தின் பரப்பளவு, வரையாடுகள் எச்சம், வரையாடுகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஜிபிஎஸ் கருவி மூலம் வரையாடுகள் அதிகம் வாழும் பகுதி பதிவு செய்யப்பட்டது.

சுமார் 3 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இந்த அறிக்கையை இயற்கை உலகளாவிய நிதியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...