கிணத்துக்கடவு பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள எல்.ஜி தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 வயதுடையவர்களுக்கு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.



இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...