திருப்பூர்: கோடை காலத்தில் நிகழும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறை தன்னார்வலர்கள்- தீயணைப்பு துறையினர் இடையே கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது இப்பகுதியில் கோடை காலத்தில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயை வனத்துறையினர் பலமுறை கட்டுப்படுத்தி உள்ளனர்.
எனவே இந்த ஆண்டு கோடை காலமும் வனப்பகுதிகளில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு துறையின் சார்பில் வனத்துறை ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

உடுமலை அமராவதி நகர் அருகே உள்ள கரட்டுப்பதி மலை கிராமத்தில் அருகில் பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. தண்ணீர் இல்லாத இடத்தில் வனத் தீ யை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்த நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டன
குறிப்பாக கோடை காலத்தில் வனப்பகுதிக்குள் வரும் வாகன ஓட்டிகள் புகைபிடிப்பதை தடுக்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் உள்ள செடிகளில் வெட்டு ஏற்படுத்தி தீ காட்டுக்குள் பரவாமல் தடுக்க முடியும் என விளக்கப்பட்டது.