தடுப்பூசி பணிகள் குறித்து கோவை ஆட்சியர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசி பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசி பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி புரூக்‌ பீல்டு ரோடு பகுதியில்‌ உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனை, மொபைல்‌ சிஸ்டம்‌, சிரியன்‌ சாச்‌ சாலை, ஆர்‌.எஸ்‌.புரம்‌ தபால்‌ அலுவலகம்‌ அருகில்‌ ஆகிய பகுதிகளில்‌ கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌. பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது;

“மாநகராட்சியில்‌ 5 மண்டலங்களில்‌ சிறப்பு முகாம்‌ வாகனங்கள்‌ செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள்‌ மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளிலும்‌ பொதுமக்கள்‌ கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்‌. பொது இடங்களில்‌ கூட்டம்‌ கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்‌, முகக்கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்‌.

முகக்கவசம்‌ அணியாதவர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌, அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்‌,” என்று கூறினார். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...