கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசி பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசி பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள சீத்தாலட்சுமி மருத்துவமனை, மொபைல் சிஸ்டம், சிரியன் சாச் சாலை, ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் அருகில் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன.
இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும். பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது;
“மாநகராட்சியில் 5 மண்டலங்களில் சிறப்பு முகாம் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,” என்று கூறினார். கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.