சித்திரைத் திருநாளை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள் - தீர்த்த குடங்கள் எடுத்து வழிபாடு!

கோவை: சித்திரைத் திருநாளை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் வழிபாடு செய்தனர்.


கோவை: சித்திரைத் திருநாளை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவிலில் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

இந்த கோவிலிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் மலைப்பாதையில் நடந்து சென்றால் பஞ்சலிங்க அருவி வரும். இந்த பஞ்சலிங்க அருவியில் நீராட ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில், இன்று சித்திரை திருநாள் என்பதால் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து தங்களது சொந்த கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல இன்று இங்கு வருகை தந்தனர்.



அப்போது, கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். கொரோனா பரவல் எதிரொலியால் இன்று இங்கு பெரிய அளவில் கூட்டம் வராது என எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால், அதற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.



மேலும் இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அருவிக்கு சென்று குளிப்பதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...