கோவை: வால்பாறையில் அரசு பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு எஸ்டேட்டில் இருந்து முடீஸ் வழியாக அரசுப்பேருந்து காந்தி சிலை வளாகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டான் மோர் சந்திப்பில் இருந்து மேல் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கீழ்நோக்கி வந்துகொண்டிருந்த கார் அரசு பேருந்துடன் உரசியது. இதில் காரின் பின்பக்க பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது இதன் காரணமாக கார் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் பொதுமக்களும் கார் உரிமையாளருடன் பேசி சமாதானம் அடைந்ததை தொடர்ந்து கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.