கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பறந்து வந்து அமர்ந்தது 3 வயது பெண் மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பறந்து வந்து அமர்ந்தது 3 வயது பெண் மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர், சாலையில் கிடந்த மயிலை கண்ட பொதுமக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் மயிலை மீட்டு மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மின்சாரம் தாக்கி மயில் இறந்ததால் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது. ஊழியர்கள் சரிசெய்வததை தொடர்ந்து மின் விநியோகம் மீண்டும் சீரானது.