கோவையில் அரசு பேருந்து நிலைதடுமாறி ஓடியதில் 16 ஆடுகள் நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் அரசு பேருந்து நிலைதடுமாறி ஓடியதில் 16 ஆடுகள் நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். ஆடுகள் பண்ணை வைத்துள்ளார். இவரிடம் வேலை பார்த்து வரும் வேலுசாமி, நேற்று இரவு, 7:00 மணிக்கு மேய்ச்சலை முடித்து விட்டு, பண்ணை நோக்கி, ஆடுகளை ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், மத்தம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து, ஆடுகள் மீது மோதியது. இதில், 16 ஆடுகள், அதே இடத்தில் இறந்தன.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.