கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிணத்துக்கடவு சிவலோகநாதர் சிவலோகநாயகி கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாளான இன்று பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள சிவலோகநாதர் சிவலோகநாயகி திருக்கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது, இன்று அதிகாலை சிவலோகநாதர் மற்றும் சிவலோகநாயகி அம்மனுக்கு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் இன்று காலை முதல் கொரானா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி முககவசம் அணிந்து கோவிலுக்கு வந்தனர். பின்னர், பக்தர்கள் சிவலோகநாதர் மற்றும் சிவலோக நாயகி அம்மனை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.