கோவை: கோவை மாவட்டத்தில், பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக, 42 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அரசின் முதன்மை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் துறை முதன்மை செயலருமான முருகானந்தம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், அலுவலர்கள் மத்தியில் அரசு செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 63 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 58 ஆயிரத்து 860 பேர் குணம் அடைந்துள்ளனர். 699 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, அரசு மற்றும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்காக, 2,397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 502 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல, மாவட்டத்தில், 42 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது நாளொன்றுக்கு, 500 முதல் 600 பேர், தொற்று பாதிக்கப்படுகின்றனர். அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, முருகானந்தம் பேசினார்.