உணவக வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஓட்டல்கள் சங்கம் கண்டனம்!

கோவை: காந்திபுரம் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: காந்திபுரம் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“தாக்குதல் சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தம் 6 பேர் கூட இல்லை. மேலும் இரவு 10:00 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உணவகங்கள் இரவு 11:00 மணி வரை செயல்படலாம். கடையில் ஐம்பது சதவீதம் அளவுக்கு அமர்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் நலன் காக்க 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில்ஓட்டல்கள் தொழில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு உட் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய செயல் பொதுமக்களுக்கு மேலும் அதிருப்தி நிலையை உருவாக்கும். சட்டத்திற்கு விரோதமாக நடந்த இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

மேலும், இச்சம்பவம் வியாபரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கோயம்புத்தூர் ஓட்டல்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...