கோவையில் இன்று மாலை ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி..!

கோவை: ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.


கோவை: ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் எம்.ஐ. முகமது அலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரமலான் நோன்பு தொடங்கும் நாள் பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்தின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு கரும்புக்கடை பவுசூல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் வளாகத்தில் நடைபெறுகிறது. பிறை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அப்துல் ரஹீம் இம்தாதி செயலாளர் நாசர் தீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் ஹலால் கமிட்டி சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் அருகே உள்ள இர் சத்துல் முஸ்லிமின் ஷபிப்பியா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் 7 மணிக்கு நடைபெற உள்ளது. பினா பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விவரம் அறியலாம் என்று கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...