கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்குவது நல்லதல்ல என இந்தியன் வங்கி ஊழியர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் 18 வது தமிழ் மாநில மாநாடு மாநில தலைவர் எஸ்.அரிராவ் கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மாநாட்டு தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் க.கிருட்டிணன் முன்மொழிந்தார். தீர்மானங்களில் கூறப்பட்டிருப்பதாவது;
“மக்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது அரசின் பொதுத்துறை வங்கிகள் மட்டும்தான். எனவே மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்பு,வங்கிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தியன் வங்கிகளில் பணியாற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

விஞ்ஞான பூர்வமான மாற்றல் கொள்கையை உருவாக்க வேண்டும். கொரோனா களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும்.” இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் இந்தியன் வங்கி ஊழியர் சங்க தமிழ் மாநில தலைவராக சுனில் குமார், பொதுச்செயலாளராக ரமேஷ்குமார் மற்றும் பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் என்.ராஜகோபால், சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ராஜ், அலகாபாத் வங்கி ஊழியர் தலைவர் சஞ்சய் குமார் ஆகியோர் உரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பண்பாடு, கல்வி, பள்ளி என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.