கோவை கிணத்துக்கடவு அருகே போதிய வருமானம் இல்லாத மன விரக்தியில் வாடகை கார் உரிமையாளர் தற்கொலை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே போதிய வருமானம் இல்லாமல் மன விரக்தியில் வாடகை கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே போதிய வருமானம் இல்லாமல் மன விரக்தியில் வாடகை கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(42), இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். ரவிக்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் நீலகிரி தைலத்தை குடித்துவிட்டு மயக்கம் அடைந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரவிக்குமாரின் உடல்நிலை மோசமானதால் நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த ரவிக்குமார் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார் தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாகவும், இதனால் மன விரக்தியில் இருந்த ரவிக்குமார் நீலகிரித் தைலம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இறந்த ரவிகுமாரின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...