அதிமுக-திமுக இடையேயான செல்வபுரம் மோதல் விவகாரத்தில் இருதரப்பினர் 200 பேர் மீது வழக்கு!

கோவை : வாக்குப்பதிவு அன்று கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி மையத்தில் நடந்த அதிமுக-திமுக மோதல் விவகாரத்தில் இருதரப்பினரையும் சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வாக்குப்பதிவு அன்று கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி மையத்தில் நடந்த அதிமுக-திமுக மோதல் விவகாரத்தில் இருதரப்பினரையும் சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை வரை இடைவெளி இன்றி நடைபெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வாக்குப்பதிவை பார்வையிட வந்தார்.

அப்போது அங்கு இருந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் வேட்பாளரை தாக்க முற்பட்டதால் அங்கு இருதரப்புக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் திமுக வேட்பாளரை காப்பாற்றி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹலன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...