தேர்தல் முடிந்த மறுநாளே தங்கம் விலை உயர்ந்ததால் சாதாரண மக்கள் அதிர்ச்சி!

கோவை: தேர்தல் முடிந்த மறுநாளே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் சாதாரண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



:கோவை: தேர்தல் முடிந்தமறுநாளே தங்கத்தின்விலை கிடுகிடுவென உயர்ந்ததால் சாதாரண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் உலக அளவில் பிற வணிகங்களில் முதலீடு செய்வது குறைந்தது. எனவே, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.அதன் தாக்கம் விலையிலும் எதிரொலிக்க தொடங்கியது.

வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வந்தது. ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்று வரலாறு படைத்தது. இது மக்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியது.

இச்சூழலில் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதை அடுத்து உடனடியாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் வரை குறைந்து. ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது.பல மாதங்களுக்குப் பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை மெல்ல உயர தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மறு தினமான இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 620 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 35 ஆயிரத்து 480 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை மார்க்கெட்டில் காணப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை(சவரன் ஒன்றுக்கு) விவரம் வருமாறு;

மார்ச் 31: 33 ஆயிரத்து 984 ரூபாய்

ஏப்ரல் 1: 34 ஆயிரத்து 368 ரூபாய்

ஏப்ரல் 2 : 34 ஆயிரத்து 856 ரூபாய்

ஏப்ரல் 3: 34 ஆயிரத்து 864 ரூபாய்

ஏப்ரல் 4 மார்க்கெட் விடுமுறை

ஏப்ரல் 5: 34 ஆயிரத்து 856 ரூபாய்

ஏப்ரல் 6 மார்க்கெட் விடுமுறை

ஏப்ரல் 7 இன்று 35 ஆயிரத்து 480 ரூபாய்

இவ்வாறு கோவையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...