கோவை: கோவை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வேட்பாளர்கள் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், கோவை சலிவன் வீதி பகுதியில் வாக்கு செலுத்த வந்த வாக்காளர் கையில் டோக்கன்களை பாஜகவினர் வழங்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அவர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து டோக்கனை பறிமுதல் செய்தனர். அந்த டோக்கன் வாக்கு செலுத்தி முடிந்தபின்பு பணம் பெற்றுக் கொள்வதற்காக என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து புகார் செய்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து கோவை தெற்கு தொகுதி திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் இணைந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் வாக்கு பதிவு செய்யக்கூடிய சலிவன் வீதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.