கோவை: கோவை மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வாக்காளர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்கிற பூத் சிலிப் விநியோகம் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சரிவர வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் பூத் சிலிப்கள் தேர்தல் நாள் வரையிலும் கூட வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையத்தில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வாக்காளர்கள் அதிகளவில்வாக்குச்சாவடிகளில் குவிந்து வருவதால், பூத் சிலிப் வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாக்காளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், வாக்களிக்க வருவோருக்கு வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவாமல் தடுக்க வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டது.