கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் - பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நம்பிக்கை!

கோவை: கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை தெற்கு சட்டமன்றம் தொகுதி பாஜக வேட்பாளரும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட டாடாபாத் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து அத்தொகுதிக்குட்பட்ட பாஜக தொண்டர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

ஜனநாயக அமைப்பில் வாக்களிப்பது என்பது தலையாய கடமையாகும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நம்மை ஆள்பவர்களை தேர்வு செய்வது நமது உரிமையாகும். நல்லவர்களை ஆதரித்து அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த ஒரு நாள் என்பது நமது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாளாகும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வாக்களிப்பது என்பது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நாம் அளிக்கக் கூடிய மிக முக்கிய பங்களிப்பு என்பதை கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தாமரை மலரும் தொகுதியாக நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...