கோவை; அதிமுகவுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
:கோவை; அதிமுவுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய கடைசி நாளான இன்று கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராம் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் அருகே இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
'SimpliCity' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. நான் பரப்புரை மேற்கொண்ட இடங்களில் எல்லாம் இதை நேரடியாக காண முடிந்தது. இந்த சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற கார்த்திக் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
நான் வாக்கு கேட்டு சென்ற இடமெல்லாம் மக்கள் திமுக குறித்த புகார்களை முன்வைத்தனர். அதிமுக பெண்களை மதிக்கும் கட்சி. தாய்மையைப் போற்றும் கட்சி. பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளோம்.
எனவே சிங்காநல்லூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதல் 30 நாட்களுக்குள், நான் எனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல ஏழு இடங்களில் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும்.
நடமாடும் குறைதீர்ப்பு மையங்களும் செயல்படுத்தப்பட்டு மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகம் இருந்த காலத்தில் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பல்வேறு உதவி பொருட்களை சிங்காநல்லூர் மக்களுக்கு நேரடியாக வழங்கினேன். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் செய்த உதவிக்கு நிச்சயம் மக்கள் மதிப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.”இவ்வாறு கே.ஆர்.ஜெயராம் கூறினார்.