செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர் மீட்பு!

கோவை; மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.


கோவை; மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கோவை காரணம் பேட்டையைச் சேர்ந்த குருசாமி (48) பால் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். இன்று காலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திற்கு லாரியை எடுத்துச் சென்றார். திடீரென அவர் அதே பகுதியில் உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறினார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் குருசாமியை டவரில் இருந்து இறங்க கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்தார். தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை அடம்பிடித்த குருசாமி, தன்னை பிரிந்து வாழும் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை மனைவியுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து செல்போன் டவரில் இருந்து அவர் கீழே இறங்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...