ஒரு ரூபாய்க்கு மிகவும் சுவையான இட்லி வழங்கிய கமலாத்தாள் பாட்டிக்கு நன்றி - தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி

கோவை: கோவை வடிவேலாம் பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு மிகவும் சுவையான இட்லி வழங்கிய கமலாத்தாள் பாட்டிக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை வடிவேலாம் பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு மிகவும் சுவையான இட்லி வழங்கிய கமலாத்தாள் பாட்டிக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:



தொண்டாமுத்தூர் தொகுதி வடிவேலாம் பாளையத்தில் திருமதி. கமலாத்தாள் அவர்களின் ஒரு ரூபாய் இட்லி கடையில் சாப்பிட்டேன்.



50 வருடங்களாக தான் இந்தக் கடையை நடத்தி வருவதாகவும் சில வருடங்கள் முன்பு வரை 50 பைசாவிற்கு விற்று வந்த இட்லியை மோடி அரசு அடிப்படை உணவு பொருட்களின் மீது செய்த விலையேற்றத்தால் இட்லியை 1 ரூபாய்க்கு விற்றுவருகிறார்.

SP வேலுமணி அவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் "தீதின்றி வந்த பொருள்" என்ற கூற்றுப்படி தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவரது மகன் விவசாயம் செய்து வருகிறார். காலை 4.30க்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து காலை 6.30 மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுகிறார். காலை 11.30 வரை வியாபாரம் நடக்கிறது.



மிகவும் சுவையான காலை உணவு வழங்கியதற்காக கமலாத்தாள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. ஒன்றிய செயலாளர் சாமிப்பையன் மற்றும் பகுதி பொறுப்பாளர் சின்ராசு அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காலை நல்லதொரு உணவுடன் தொடங்கிய நமது பயணம்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...