சி-விஜில் செயலியில் மக்கள் அளித்த 503 புகார்களுக்கு தீர்வு!

கோவை: சி-விஜில் எனும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலியில் கோவை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


கோவை: சி-விஜில் எனும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலியில் கோவை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து புகார்களைப் பெற கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தின் 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுத்தல், தேர்தல் விதிமுறைமீறல்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பெறப்பட்ட 193 புகார்களில் 124 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 66 புகார்கள் ஆதாரம் இல்லாத தால் நிராகரிக்கப்பட்டன. மேலும் 3 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே போல் தேர்தல் விதிமீறல்களை மொபைல் வழியாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க சி-விஜில் எனும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட இந்த செயலியின் வழியே 688 புகார்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் 503 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. 163 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 2 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...