கோவை; அண்ணா கட்டுமானத் தொழிற்சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
கோவை; அண்ணா கட்டுமானத் தொழிற்சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் கோவை மாவட்டத்
தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அண்ணா கட்டுமான தொழிற்சங்க தலைவர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது;
மத்தியில் ஆளும் பாஜ அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுக்கு கட்டுமான அமைப்பு சாரா வாரியங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 2 கோடிக்கும் மேற்பட்ட கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை சீரமைக்கவும், மேம்படுத்தவும், தனி வாரியங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, அண்ணா தொழிற்சங்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் பதிவு பெற்ற தொழிலாளர்களும் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.” இவ்வாறு மாவட்ட அண்ணா கட்டுமான தொழிற்சங்க தலைவர் முருகேசன் கூறினார்